கொரோனாவுக்கு மத்தில 'இப்படி' ஒரு துயரமா?... 3 நோயாளிகள் 'உடல்' கருகி பலி!
முகப்பு > செய்திகள் > உலகம்தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் 3 பேர் உடல் கருகி பலியாகினர்.

உலகம் முழுவதையும் வேகமாக ஆட்டிப்படைத்து வரும் கொடிய கொரோனா ரஷ்யாவையும் விட்டு வைக்கவில்லை. அங்கு நாளுக்குநாள் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். இதற்கிடையில் தீ விபத்தால் நோயாளிகள் இறப்பது அங்கு வாடிக்கையாகி வருகிறது.
நேற்று ரஷியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜெலெனோடோல்க் என்னும் இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. இதய நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் தளத்தில் நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென பரவிய தீக்கு 3 பேர் பலியாகினர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து கேள்விப்பட்ட தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
முன்னதாக கடந்த 13-ந்தேதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் கொரோனா நோயாளிகள் 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
