'நிரந்தரமாக.. வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணா'.. 'ஃபியூச்சர்ல இந்த பிரச்சனையெல்லாம் வரும்!'.. 'ஷாக்' கொடுத்த 'CEO'!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Siva Sankar | May 20, 2020 08:34 PM

ட்விட்டர் நிறுவனம் தங்களது ஊழியர்கள் இனி நிரந்தரமாக வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது.  இந்தநிலையில் அப்படி வேலை செய்தால் மனதளவில் கடும் விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

Work From Home may leads to these problems in futurem, Microsoft CEO

கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே இருக்கும் சூழலில் ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட தொழில்நுட்ப தளங்களின் தலைவர்கள் பலரும் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரியச் சொல்லி சலுகைகளை அளித்து வந்தனர். ஆனால் ட்விட்டர் நிறுவனமோ சற்று அகலக் கால் வைத்து, இனி பணியாளர்கள் நிரந்தரமாகவே வீட்டிலிருந்து பணிபுரியலாம் முக்கிய அலுவலகப் பணியாளர்கள் மட்டும், அலுவலகம் வந்தால் போதும், கொரோனா கால ஊரடங்கு முடிந்த பிறகும்கூட, பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதை தொடரலாம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் அமெரிக்க ஊடகம் ஒன்றில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா இது பற்றிய தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில், இதுபோன்று ஊழியர்களின் வொர்க் ஃப்ரம் ஹோம் தேர்வினை நிரந்தரமாக்கினால், அதன் மூலமாக அவர்களின் மனநிலை பாதிக்கலாம் என்றும், பணியிடங்களில் பிறருடன் பழகுவது, எப்படி ஒற்றுமையாக சேர்ந்து கூட்டு வேலைகளை செய்வது போன்ற சமூகத் தொடர்பு விஷயங்களிலிருந்து அவர்கள் விலக நேரிடும் என்றும் இதனால் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நேரில் சந்திக்கும் கூட்டங்களில் இருக்கும் ஆற்றலை எப்பொழுதும் வீடியோ கால் மீட்டிங்குகள் கொடுக்க முடியாது என்றும் இது கடும் பிரச்சினைகளை பிற்காலத்தில் உண்டாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.