தாராளமா '10 வருஷம்' எடுத்துக்கோங்க... இனிமே 'உங்க வீடு தான்' ஆஃபிஸ்... 'அனுமதி வழங்கிய நிறுவனம்...'
முகப்பு > செய்திகள் > உலகம்பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலானோர் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகள் வரை வீட்டில் இருந்தே பணியாற்றுவர்கள் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அமெரிக்காவை துவம்சம் செய்து வரும் நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில் உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த 2 மாதங்களாக அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க 5 அல்லது 10 ஆண்டுகள் வரை வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் என மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.
இதன்படி 48 ஆயித்துக்கும் அதிகமான அந்நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உள்ளனர். அவரவர் இடங்களுக்கு ஏற்றவாறு சம்பளம் மாறுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.