'சிறுமியிடம்' இரண்டரை ஆண்டுகள் 'நெருங்கி' பழகிய காசி... மேலும் பல சிறுமிகளை 'ஏமாற்றி' இருக்கலாம்?... வெளியான 'அதிர்ச்சி' தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிறுமி ஒருவரிடம் காசி இரண்டரை ஆண்டுகள் நெருங்கி பழகியதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவர் மீது பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். ஆனால் பெண்களை மிரட்டியது, அவர்களிடம் பணம் வாங்கியது உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் அவர்மீது பதிவானதால் குண்டர் மற்றும் போக்ஸோ சட்டங்களின் கீழ் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து மகள்கள் உடன் நெருங்கி பழகிய வீடியோக்களை வைத்து அம்மாக்களையும் மிரட்டியது மற்றும் முக்கிய பிரமுகர்களின் குடும்ப பெண்களுடன் நெருக்கமாக இருந்தது என பல்வேறு புதிய தகவல்களை சமீபத்தில் போலீசார் வெளியிட்டனர். இந்த நிலையில் சிறுமி ஒருவருடன் காசி நெருங்கி பழகிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. காசியால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அளித்த புகாரின்பேரில் விசாரிப்பதற்காக, காசியை காவலில் எடுத்து மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதனையடுத்து காசியை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நேற்று முன்தினம் கோர்ட்டு அனுமதி அளித்தது. உடனே காசியை மகளிர் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணை முடிவில் விசாரணை முடிவில் காசியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பட்டியல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''காசி மீது கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் ஒரு சிறுமி அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த காசியை காவலில் எடுத்துள்ளோம்.
தற்போது வரை காசி மீது கூடுதல் புகார்கள் எதுவும் வரவில்லை. அப்படி புகார்கள் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே புகார் அளித்த சிறுமியுடன் காசி சுமார் 2½ ஆண்டுகள் பழகி உள்ளார். அன்பாக பேசியும், நெருங்கி பழகியும் இருக்கிறார். ஆனால் சிறுமியை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடவில்லை. அப்படி பணம் பறிக்க முயற்சி செய்த நேரத்தில்தான் காசி போலீசில் சிக்கி உள்ளார். எனவே போலீஸ் காவலில் விசாரணை முடியும் நேரத்தில் இன்னும் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது,'' என்றார்.

மற்ற செய்திகள்
