'ஆபாச' படம் பார்த்த 'சென்னை' வாலிபருக்கு... மனைவியால் நேர்ந்த 'நடுங்க' வைக்கும் விபரீதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 21, 2020 10:56 PM

ஆபாச படம் பார்த்த சென்னை வாலிபர் மனைவியால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Chennai Youth Murdered in Nagercoil, Police Investigate

நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜாப்லின்(30). இவர் சென்னையில் படித்தபோது ஆர்.கே. நகர் பகுதியை சேர்ந்த கார்கி(35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் தூத்தூர் பகுதியில் தற்போது வசித்து வருகின்றனர். கார்கி சூப்பர் மார்க்கெட் ஒன்றை அப்பகுதியில் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்கி வீட்டில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது மனைவி அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் கார்கியின் உடலில் காயங்கள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் ஜாப்லினிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அண்ணன், அப்பாவுடன் சேர்ந்து ஜாப்லின் கணவரை கொன்றது தெரியவந்தது.

இதுகுறித்த போலீசாரிடம் ஜாப்லின் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

திருமணத்துக்கு பிறகு கார்கி என்னிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். நீண்ட நேரமாக செல்போனில் வேறு பெண்களுடன் பேசி வந்தார். இதை நான் கண்டித்தேன். சம்பவத்தன்று இரவு அவர் செல்போனில் ஆபாச படங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அதை பார்த்த நான் அவரிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது அவர் என்னை தாக்கினார்.

இந்த சம்பவத்தை எனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதேன். உடனே எனது தந்தை ஜோபாய், அண்ணன் ஜஸ்டஸ் ஆகியோர் எனது வீட்டிற்கு வந்தனர். ஆத்திரத்தில் எனது கணவரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர் இறந்தார். கொலையை மறைப்பதற்காக எனது கணவர் தூக்குப்போட்டு இறந்து விட்டதாக நாடகம் ஆடினேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.