"ஓஓ.. ஜெயில்லதானே இருக்கேன்னு துணிச்சலா?".. 'புகார்' கொடுத்த 5 பெண்களுக்கும் நேர்ந்த 'கதி'!.. 'மிரளவைக்கும்' காசியின் 'நெட்வொர்க்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவிலில் 80க்கும் மேற்பட்ட பெண்களை முகநூல், இன்ஸ்டாகிராம், வழியாக தன் காதல் வலைக்குள் வீழ்த்தி பணம் பறித்த காமுகன் காசி குண்டர் சட்டத்தில் கைதானதை அடுத்து, இந்த விஷயத்தில் காசியின் கூட்டாளிகள், முக்கிய புள்ளிகள், அரசியல்வாதிகள் பலரும் வெளியே தெரியவந்தனர்.
முன்னதாக காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்து அடைத்து வைத்ததை அடுத்து, காசியிடம் ஏமார்ந்ததால் கொதிப்பில் இருந்த பெண்களுள் 5 பேர் துணிச்சலுடன் முன்வந்து காசி பற்றி புகார் அளித்தனர். இதனிடையே இரண்டாவது முறையாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல்துறையினர் காசியை காவலில் எடுத்து விசாரிக்க, அப்போது போலீஸின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த காசி, தான் எந்த பெண்ணையும் தேடிப்போய் திட்டமிற்று ஏமாற்றவில்லை என்றும், அவர்களே வந்து தன்னிடம் விரும்பிவந்து பணத்தைக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, காசி, வெளிநாட்டில் பதுங்கியுள்ள தனது நண்பன் கவுதம் மூலம், தன் மீது புகார் அளித்த பெண்களுடன் காசி இருக்கும் அந்தரங்க வீடியோக்களை இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியிடவைத்துள்ளார். இதனால் காசி மீது புகார் அளித்த பெண்கள் அதிர்ந்துள்ளனர். இதனால் இனி யாரும் காசியை எதிர்த்து யாரும் புகார் அளிக்க முன்வரக்கூடாது என்று கருதி காசி இதைச் செய்ததாகத் தெரிகிறது.
இதேபோல், காசியின் முக்கிய லேப்டாப் வழக்கறிஞர் ஒருவரிடம் சென்றதாகவும், அவரிடம் இருந்து அவரது பெண் தோழிகளிடம் லேப்டாப் சென்றதாகவும் மாற்றிமாற்றி சுற்றலில் விடுகின்றனர். இது அத்தனையும் காசி போலீஸின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போதே நடக்கிறதென்றால், காசியின் வெளி ஆட்கள் நெட்வொர்க் அப்படி இருக்கிறது என்பதுதான் இதில் ஆச்சரியம். இதில் வெளிநாட்டில் உள்ள காசியின் நண்பன் கவுதம் வெளிநாட்டில் இருந்து வந்தால், விமானநிலையத்திலேயே மடக்கிப் பிடிக்க காவலர்கள் காத்திருக்கின்றனர்.