‘தாயம்’ விளையாட்டால் வந்த வினை.. டிராக்டர் டிரைவருக்கு நேர்ந்த சோகம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாயம் விளையாடியதை கண்டித்த டிராக்டர் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அடுத்த குமாரகுப்பம் அருந்ததி காலனியை சேர்ந்தவர் ரகு (40). இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் வசித்து வருபவர் விக்கி (20). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாள்களாக ரகு வீட்டின் முன் விக்கி தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் தாயம் விளையாடி வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த ரகு அவர்களை பலமுறை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த விக்கி தனது நண்பர்களுடன் நேற்று மாலை ரகுவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த ரகுவை காய்கறி நறுக்கும் கத்தியால் விக்கி சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரகு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள விக்கி மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தாயம் விளையாடியதை கண்டித்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
