மனைவி 'வேலைக்கு' போன நேரம் பார்த்து... 3 குழந்தைகளுடன் தந்தை எடுத்த 'விபரீத' முடிவு... 'கதறித்துடித்த' தாய்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 19, 2020 11:31 PM

பெற்ற குழந்தைகளை கொலை செய்து தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Father killed 3 children Near Sriperumbudur, Police Investigate

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (37). இவரது மனைவி கோவிந்தம்மாள் என்ற துளசி (32). இவர்களுக்கு ராஜேஸ்வரி (12), ஷாலினி (10) என்ற 2 மகள்களும், சேதுராமன் (8) என்ற மகனும் இருந்தனர். கணவன், மனைவி இருவரும் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தனர்.

கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். சண்டை ஏற்பட்டால் கோவிந்தம்மாள் கோவித்துக்கொண்டு அவர் அம்மா வீட்டுக்கு சென்று விடுவாராம். அப்போது எல்லாம் ஆறுமுகம் சென்று அவரை சமாதானம் செய்து அழைத்து வருவாராம். இதேபோல நேற்று முன்தினம் வழக்கம்போல ஆறுமுகத்திற்கும் கோவிந்தம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று காலை வேலைக்கு சென்ற கோவிந்தம்மாள் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூத்த மகள் ராஜேஸ்வரி கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக கிடந்தாள்.

அதிர்ந்து போன அவர் கணவர் மற்றும் குழந்தைகளை தேடியபோது ஆறுமுகம் சுடுகாடு பக்கத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அடுத்த 2 குழந்தைகளும் கிணற்றுக்குள் பிணமாக கிடந்தனர். கல்லைக்கட்டி அவர்களை ஆறுமுகம் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகம் மற்றும் குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.