'பூசாரி' அவரோட சீடர்கள் எல்லாருமே சேர்ந்து... 'பொண்ணுகள' அடைச்சு வச்சு... ஊரடங்கை 'உலுக்கிய' பாலியல் வன்கொடுமை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | May 21, 2020 12:27 PM

புகழ்பெற்ற அமிர்தசரஸ் நகரின் அருகில் உள்ள ராம் தீரத் கோயிலில் பெண்களை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Head Priest of Amritsar Temple Arrested For Repeatedly Raping Two Wome

ஊரடங்கில் பெண்கள் மீதான வன்முறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அமிர்தசரஸ் நகரில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராம் தீரத் என்னும் கோயில் ஒன்றில் 2 பெண்களை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து பட்டியல் இனத்தின் பஞ்சாப் ஆணைய உறுப்பினர் தர்செம் சிங் சியால்கா, புகார் ஒன்றை அமிர்தசரஸ் போலீஸிடம் கொடுத்தார்.

புகாரின் பேரில் அங்கு சோதனை நடத்திய போலீசார் அடைத்து வைத்திருந்த இரண்டு பெண்களையும் அதிரடியாக உள்ளே புகுந்து மீட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவரான 25 வயதுப் பெண் பூசாரிகளிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக ஆசிரமத்துக்கு வந்துள்ளார். அங்கு இருந்த சூரஜ் நாத், நச்சதர் நாத் ஆகிய சீடர்கள் இவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து தலைமை பூசாரி கிர்தாரி நாத் மற்றும் வருந்தர் நாத் ஆகியோரிடம் புகாரளிக்க சென்றுள்ளனர்.

ஆனால் புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இருவரையும் அடைத்து வைத்து அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவர்களின் செல்போன்களையும் பிடுங்கி வைத்துக்கொண்டு  கொடுமை செய்துள்ளனர். இதில் ஒருவர் அங்கிருந்த போன் ஒன்றை திருடி தனது அண்ணனுக்கு தகவல் தெரிவிக்க தற்போது போலீசார் தலைமை பூசாரி மற்றும் சீடர்கள் ஆகியோர் மீது 376, 379, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.