டிக்டாக்கில் அதிக ‘லைக்ஸ்’ வாங்க ஆசை.. இளைஞர் செய்த ‘கொடூர’ செயல்.. நெல்லையை அதிரவைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 22, 2020 10:37 AM

டிக்டாக்கில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் பூனையை தூக்கிலிட்டு வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tirunelveli youth arrested by police for making TikTok video with cat

நெல்லை மாவட்டம் பழவூர் அடுத்த செட்டிக்குளத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவர் மாட்டுப்பண்ணையில் வேலை செய்து வருகிறார். தங்கதுரை டிக்டாக் மீது அதிக மோகம் கொண்டவர் என சொல்லப்படுகிறது. இதனால் தான் செல்லமாக வளர்த்து வந்த பூனையை தூக்கிலிட்டு அதோடு டிக்டாக் செய்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து நெல்லை மிருகவதை தடுப்பு பாதுகாப்பு இயக்கத்திக்கு தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் பழவூர் காவல் நிலையத்தில் டிக்டாக் வீடியோ தொடர்பாக புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் தங்கதுரை போலீசார் கைது செய்துள்ளனர். டிக்டாக்கில் அதிக லைக்ஸ் வாங்க ஆசைப்பட்டு தான் ஆசையாக வளர்த்த பூனையை இளைஞர் தூக்கிலிட்டு வீடியோ எடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.