திருமணம் ஆன பெண்ணுடன் ‘தகாத உறவு’.. இரவு வீடு புகுந்து இளைஞர் செய்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 21, 2020 11:00 AM

திருப்பூர் அருகே தகாத உறவால் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tirupur youth arrested for murder woman over illegal relationship

திருப்பூர் மாவட்டம் முத்தூர்-கொடுமுடி ரோடு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (37). இவரது மனைவி சங்கீதா (33). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சங்கீதா அப்பகுதியில் பியூட்டி பார்லர் வைத்திருந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவேக் (28) என்பவருடன் சங்கீதாவுக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் தனிமையில் சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர்.

இதற்கிடையில் ‘நான் எனது கணவரை விட்டு வந்து விடுகின்றேன். நீ என்னை திருமணம் செய்து கொள்’ என சங்கீதா விவேக்கை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் சங்கீதாவை கொலை செய்ய விவேக் திட்டமிட்டுள்ளார். இதனை அடுத்து கடந்த 9ம் தேதி இரவு சங்கீதாவின் வீட்டுக்கு விவேக் சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் கணவர் யுவராஜ், குழந்தைகள் இருந்துள்ளனர். உடனே யுவராஜையும், குழந்தைகளையும் வெளியே தள்ளிவிட்டு சங்கீதாவுக்கு விஷமாத்திரை கொடுத்து கழுத்தை நெறீத்து கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் தானும் அந்த விஷமாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று யுவராஜ் பார்த்துள்ளார்.

அப்போது வீட்டுக்குள் சங்கீதா சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். விவேக் மயங்கி நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பிய விவேக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.