அந்த 'பழக்கத்தை' விட முடியல... திருமணமான 3 மாதங்களில்... 'விபரீத' முடிவை தேடிக்கொண்ட புது மாப்பிள்ளை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 21, 2020 01:47 PM

திருமணமான 3 மாதங்களில் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Newly Married Man Suicide in Karur, Police Investigate

கரூர் வேடிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(33) இவருக்கும் சந்தோஷம்(24) என்ற பெண்ணுக்கும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஜெயப்பிரகாசுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

இதுபோல நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஜெயபிரகாஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை கீழே இறக்கி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #POLICE