கொடுத்த ‘கடனை’ திரும்ப தரோம்.. நம்பிப்போன நபருக்கு நடந்த கொடூரம்.. பகீர் கிளப்பிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 20, 2020 11:26 AM

மதுரையில் கொடுத்த கடனை திருப்பி கேட்ட நபரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Madurai man murder for loan issue, Police arrested 2 person

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள முட்புதரில் நேற்று முன்தினம் தீயில் கருகிய நிலையில் முட்புதருக்குள் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர், மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பது தெரியவந்தது. இவர் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியின் முகவராக இருந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மதுரையை சேர்ந்த விக்னேஷ், திண்டுக்கலை சேர்ந்த கணேஷ் பாபு ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் சிவக்குமாரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று பங்கு சந்தையில் முதலீடு செய்ததாகவும், அதில் நஷ்டமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொடுத்த கடனை சிவக்குமார் திரும்ப கேட்டுள்ளார். இதனை அடுத்து பணத்தை திரும்ப தருவதாக கூறி அவரை சமயநல்லூர் பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர். பின்னர் சிவக்குமாரின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். தற்போது விக்னேஷ், கணேஷ் பாபு ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடுத்த கடனை திரும்ப கேட்ட நபரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.