தங்க இடம் கொடுத்த 'நண்பரின்'... மனைவி, குழந்தைகளுடன் 'ஓடிப்போன' நண்பன்... சமாதானம் செய்யப்போன போலீஸ்க்கு 'ஷாக்' கொடுத்த மனைவி!
முகப்பு > செய்திகள் > இந்தியாதங்க இடமளித்த மனைவி, குழந்தைகளுடன் நண்பன் ஓடிப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளா மாநிலம் மூணாறு மாவட்டம் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் லோதாரியோ(32). இவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்து வருகிறார். திடீர் ஊரடங்கால் முட்டுவாப்புழா என்னும் இடத்தில் மாட்டிக்கொண்டார். அப்போது அவரின் நண்பர் ஒருவர் அப்பகுதியில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நண்பரின் உறவினர்களுக்கு போன் செய்து நண்பரின் எண்ணை வாங்கியிருக்கிறார்.
அதன்பிறகு நண்பருக்கு போன் செய்து தான் ஊரடங்கு காரணமாக கஷ்டப்பட்டு கொண்டு இருப்பதாகவும் தனக்கு உதவி செய்யும்படியும் லோதாரியோ கெஞ்சி கேட்டுள்ளார். அவரும் நண்பனின் நிலையை கண்டு வேதனையடைந்து, அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். சுமார் ஒருமாத காலம் அந்த இளைஞரை வீட்டில் தங்கவைத்து அவருக்கு சோறு போட்டிருக்கிறார்.
சமீபத்தில் மூணாறு மாவட்டம் பச்சை மண்டலமானது. இதையடுத்து நண்பர் அந்த இளைஞரை மீண்டும் வேலைக்கு செல்லுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு அவர் நண்பர் செவிசாய்க்கவில்லை. இதனால் இவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென ஒருநாள் அவர் நண்பரின் மனைவி, குழந்தைகளுடன் வீட்டைவிட்டு ஓடிப்போய் விட்டார். இதையடுத்து நண்பர் இதுகுறித்து போலீசில் புகாரளிக்க போலீசார் அவர்கள் இருவரையும் அழைத்து விசாரித்துள்ளனர்.
அப்போது தன்னுடைய புதிய காதலருடன் தான் செல்வேன் என்றும், குழந்தைகளும் தன்னுடன் தான் இருப்பார்கள் எனவும் அந்த பெண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் கணவர் வாங்கிக்கொடுத்த கார் மற்றும் நகைகளையும் அந்த பெண் தன்னுடன் எடுத்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. போலீசார் எவ்வளவோ அறிவுரை கூறியும் எதையும் கேட்காமல் அந்த பெண் தன்னுடைய புதிய காதலருடன் சென்று விட்டார். இது போல் ஏற்கனவே இரண்டுமுறை அந்த பெண் திடீர் காதலனுடன் ஓடிபோனதாகவும் போலீசார் தலையிட்டு சேர்த்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
