'மச்சான் செம பிளான் இருக்கு'...'நம்பி வந்த சிறுமி'...'நீலாங்கரையில் தனி வீடு'...சென்னையை உலுக்கிய கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 02, 2020 09:44 AM

15 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் சென்னையில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai : 15-year-old girl raped by 3 friends in Neelankarai

விழுப்புரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது தாயாரால் தனித்து விடப்பட்டார். இதனால் அந்த சிறுமி சென்னை அடையாறில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அந்த வீட்டிற்கு சதீஷ்குமார் என்பவர் தண்ணீர் கேன் போடுவதற்கு அவ்வப்போது வந்து சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் சிறுமிக்கும் அந்த வாலிபருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டடத்தில் வாலிபர் சதீஷ்குமார், சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டுள்ளார். இதை அனைத்தையும் உண்மை என நம்பிய அந்த சிறுமி, வீட்டை விட்டு சதிஷ்குமாருடன் வெளியேறியுள்ளார். தன்னை நம்பி வந்த சிறுமியைச் சென்னை நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்த சதீஷ்குமார், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர், தனது நண்பர்கள் வினோத், ராஜா ஆகியோருடன் சேர்ந்து சதீஷ்குமார் அந்த சிறுமியைக் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சுமார் 2 வார காலம் அந்த சிறுமி 3 பேரால் சிதைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அந்த சிறுமியின் உறவினர் சிறுமி காணாமல் போய்விட்டதாக அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர். இந்தநிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் மூலமாகக் குறிப்பிட்ட சிறுமி நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் நேற்று முன்தினம் இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியைப் பத்திரமாக மீட்டனர்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் சதீஷ்குமார், அவரது நண்பர்கள் வினோத், ராஜா ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நம்பி வந்த சிறுமியை நண்பர்களோடு சேர்ந்து சிதைத்த கொடூரம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #RAPE #SEXUALABUSE #POLICE #CHENNAI #3 FRIENDS #NEELANKARAI