கார் மீது ‘மோதி’ கட்டுப்பாட்டை இழந்து ‘கவிழ்ந்த’ பேருந்து... ‘பயங்கர’ விபத்தில் ஒருவர் பலி; ‘80 பேர்’ காயம்... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 03, 2020 10:09 PM

கேரள மாநிலம் வயநாட்டில் கார் மீது பேருந்து மோதிய கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 80 பேர் காயமடைந்துள்ளனர்.

Kerala Wayanad Accident 1 dead 80 Injured As Bus Rams Into Car

கேரள மாநிலம் வயநாட்டிலுள்ள சுல்தான் பத்தேரி பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது, திடீரென தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்து, அதில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த கோர விபத்தின்போது கார் மீது மோதிய பேருந்து கவிழ்ந்ததில் அதில் இருந்த 80 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், விபத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான பதறவைக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Tags : #ACCIDENT #KERALA #CCTV #WAYANAD #CAR #BUS #VIDEO