‘தோனி, தோனி’... மைதானத்தை ‘அதிரவைத்த’ ஆரவாரத்துடன்... ‘மாஸ்’ என்ட்ரி கொடுத்த ‘தல’ தோனி... வைரலாகும் வீடியோ...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Mar 02, 2020 10:52 PM

ரசிகர்களின் பலத்த வரவேற்புக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே அணியினர் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.

IPL 2020 CSK Video MS Dhoni Batting On Nets Chennai Crowd Roars

உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் அடைந்த தோல்விக்குப்பின் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதை தவிர்த்து வந்த தோனி நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார். இந்த மாதம் 29ஆம் தேதி 13வது ஐபிஎல் டி20 போட்டி தொடங்க உள்ள நிலையில், அதற்கான முதல்கட்ட பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பயிற்சியில் ஈடுபடுவதற்காக நேற்று சென்னை வந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தோனியுடன் சேர்ந்து பியூஷ் சாவ்லா, அம்பதி ராயுடு, முரளி விஜய், கரண் சர்மா, சாய் கிஷோர், ஜெகதீசன் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தோனி காலில் பேட் கட்டிக்கொண்டு முதல் ஷாட்டை அடிக்க, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி, தோனி என ஆரவாரத்துடன் விசில் அடித்து மைதானத்தை அதிரவைத்துள்ளனர்.

 

 

Tags : #IPL #CSK #CHENNAI-SUPER-KINGS #MSDHONI #VIRAL #VIDEO #CHENNAI