"உன் மனைவி எனக்கு, என் கணவர் உனக்கு..." துணையை மாற்றிக் கொள்ளும் 'ஆன்லைன்' டேட்டிங்... சென்னையில் பரவும் 'மீ.வீ.' கலாச்சாரம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 03, 2020 05:36 PM

திருமணம் ஆனவர்கள் தங்களது துணைகளை மாற்றிக்கொள்ளும் கலாசாரம் சென்னையில் உருவெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

couple exchange culture in chennai ecr using dating app

சென்னை ஈசிஆர் பகுதியில் எராளமான ரெசார்ட்டுகள் உள்ளன. இங்கு பணக்காரர்கள் பலர் தங்கள் பொழுதை கழிப்பதற்காக வந்து செல்வது உண்டு. அத்தகையவர்களை குறி வைத்து கொண்ட வரப்பட்டது தான் தங்களது துணையை மாற்றிக் கொள்ளும் இந்த மீ.வீ. கலாச்சாரம்.

சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் இந்த டேட்டிங் கலாச்சாரத்தை சென்னையில் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. திருமணமான தம்பதிகளை அவர்களுக்குப் பிடித்த நபர்களுடன் டேட்டிங் அமைத்துக் கொடுக்கும் ஏற்பாடுகைள ஆன்லைன் மூலம் இவர் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக இந்த தொழிலதிபர் 'மீ.வீ.' என்ற செயலியை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ஆடம்பர ரெசார்ட்டுகளுக்கு வரும் பணக்காரர்களுக்கு இந்த மீ.வி கலாச்சாரம் குறித்து விவரிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு ஏற்கனவே துணைகளை மாற்றி சென்றவர்கள் எடுத்திருக்கும் ரகசிய வீடியோக்களும், ஆடியோக்களும் காட்டப்படுகிறது.

இதனால் தூண்டப்படும் மாடர்ன் கலாசார தம்பதிகள் இந்த துணை மாற்றும் விளையாட்டுக்குள் இழுக்கப்படுகின்றனர். பின்னர் இரு வெவ்வேறு தம்பதிகளும் சந்தித்துக்கொள்ள அதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. அங்கு அறிமுகம் ஆன பின்னர் அவர்கள் உன் மனைவி எனக்கு, என் கணவர் உனக்கு எனக்கூறி தனித்தனியே டேட்டிங் செல்கின்றனர். அவர்களுக்குத் தேவையான பயணம், தனிமை, டிரிங்ஸ், டிஸ்கோ என டேட்டிங் ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.

டெல்லி, மும்பையை அடுத்து இந்த கலாச்சார சீர்கேடு சென்னையிலும் காலடி எடுத்து வைத்து விட்டதா? என பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த நவீன கலாச்சாரத்தில் சிக்கி பலரும் சீரழியும் முன்னர் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : #CHENNAI #ECR #MEE VEE #CULTURE #DATING #CULTURAL DISORDER