‘200 அடி ஆழத்துல இருந்தா கூட காப்பாத்திடலாம்’.. ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்க புதிய கருவி.. அசத்திய நெல்லை இன்ஜினீயர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 04, 2020 09:01 AM

நெல்லையை சேர்ந்த இன்ஜினீயர் ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவியைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

Tirunelveli engineer found new machine for rescuing baby from borewell

விவசாய நிலங்களில் தண்ணீருக்காக சுமார் 100 முதல் 700 அடி வரையில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுகின்றன. ஆனால் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையில் ஆழ்துளை கிணறுகளை சரிவர மூடாமல செல்வதால், அவற்றுக்குள் பிஞ்சு குழந்தைகள் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு திருச்சியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாட்டை உலுக்கியது.

இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி குழந்தைகள் உயிரிழப்பதைக் கண்டு வேதனை அடைந்த நெல்லையைச் சேர்ந்த இன்ஜினீயர் பகவதி என்பவர் புதிதாக ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார். சிலிண்டர் போன்ற அமைப்புடன் இயங்கும் இந்த கருவியில் உள்ள கேமரா குழந்தையின் இருப்பிடத்தை அறிய உதவுகிறது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள சங்கிலி போன்ற அமைப்பால் குழந்தையை மேலே தூக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கருவி மூலம் சுமார் 200 அடி ஆழத்தில் சிக்கியுள்ள 35 கிலோ எடை கொண்ட குழந்தையையும் தூக்கமுடியும் என பகவதி தெரிவித்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு சிறிய அளவில் தான் உருவாக்கிய ஆழ்துளை மீட்புக் கருவியை புதிய தொழில்நுட்பங்களுடன் மகன் மேம்படுத்தியுள்ளதாக பகவதியின் தந்தை சிவபாலன் தெரிவித்தார். தனது மகனின் கண்டுபிடிப்புகளைப் பரிசோதித்து அரசு அங்கிகாரம் வழங்க வேண்டும் என சிவபாலன் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : #TIRUNELVELI #ENGINEER #MACHINE #BOREWELL