சென்னை, தேனாம்பேட்டை அருகே 'நாட்டு வெடிகுண்டு' வீச்சு... 'அதிர்ச்சியில்' உறைந்த வாகன ஓட்டிகள்.. கார் 'கண்ணாடிகள்' சேதம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 03, 2020 06:22 PM

சென்னை தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேசன் அருகே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

unidentified men thrown bomb near chennai teynampet

சென்னை அண்ணா சாலையில் காமராஜர் அரங்கத்திற்கு அருகே மாலை சுமார் 4.30 மணி அளவில் மர்ம பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால், அருகில் இருந்த கார் ஷோரூம் ஒன்று சேதமடைந்தது. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகள்  உடைந்து சிதறின.

தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு 10 அடி தொலைவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. போலீசார் உடனடியாக வந்து சோதனை நடத்தியதில் அது நாட்டு வெடிகுண்டு என்று கண்டுபிடித்துள்ளனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததில் இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் இந்த நாட்டு வெடிகுண்டுகளை வீசிச் சென்றது தெரியவந்துள்ளது.

சிசிடிவி காட்சிகளை கொண்டு தேனாம்பேட்டை உதவி ஆணையர் கோவிந்தராஜ் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் பற்றி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

Tags : #CHENNAI #TEYNAMPET #BOMB #THROWN #UNIDENTIFIEDMEN