கட்டிடத்து 'உச்சியில' ஒரு பொண்ணோட... இவ்ளோ மோசமாவா 'போட்டோ' எடுப்பீங்க?... வைரலான புகைப்படங்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கட்டிடத்தின் உச்சியில் நின்று மிகவும் மோசமாக புகைப்படங்கள் எடுத்ததாக விளையாட்டு வீரரை ஈரான் நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.
ஈரான் நாட்டின் பிரபல தடகள வீரராக திகழ்பவர் அலிரெசா ஜபலகி. இவர் சமீபத்தில் கட்டிடத்தின் உச்சியில் நின்று ஒரு பெண்ணுடன் முத்தமிடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாக, அவ்வளவு பெரிய உயரத்தில் நின்று இப்படியா புகைப்படங்கள் எடுப்பது? என விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் அலிரெசாவின் புகைப்படங்கள் அநாகரிகமாக இருப்பதாகவும், இதைப்பார்த்து மேலும் பலர் ஆபத்தான முறையில் புகைப்படங்கள் எடுக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறி ஈரானிய போலீசார் இவரை கைது செய்துள்ளனர். ஆனால் இதற்கு முன்னரும் அலிரெசா இவ்வாறு புகைப்படங்கள் வெளியிட்டு இருப்பதாகவும் அப்போது காவல்துறை அவரை கைது செய்யவில்லை என்றும் ஈரான் நாட்டு நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அலிரெசாவின் தந்தை போதைப்பொருள் அதிகாரி ஒருவர் காணாமல் போனது தொடர்பாக கேள்வி எழுப்பிய பின்னரே, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.