ஊரடங்கால் சரிந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி!.. 'அம்பானி' போட்ட மாஸ்டர் ப்ளான்!.. அலறும் போட்டியாளர்கள்!.. தெறிக்கவிடும் புதிய திட்டம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்யும் சேவையை ஜியோமார்ட் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2 மாதங்களுக்கு முன்பு வீழ்ச்சியடைந்தது. கச்சா எண்ணெய் பொருட்களின் விலை சரிவால் இந்த வீழ்ச்சியை அந்நிறுவனம் சந்தித்தது. இந்தச் சரிவை ஈடு செய்வதற்காக புதிய வியாபாரத்தை தொடங்க நினைத்த ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ மூலம் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் விற்பனை செய்து, அதனை வீடு தோறும் டெலிவரி செய்யும் திட்டத்தை மும்பையில் அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே ஜியோ நிறுவனத்தில் ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து 10 பில்லியன் டாலரை முதலீடு செய்தன. இதைத்தொடர்ந்து ஜியோமார்ட் தொடர்பான அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி வெளியிட்டார். ஆனால் ஆன்லைனில் அத்தியாவசிப் பொருட்கள் டெலிவரி சேவை எப்போது தொடங்கும் என அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கொரோனா பொதுமுடக்கம் முடிவதற்குள் அத்தியாவசியப் பொருட்களின் டெலிவரி சேவையை ஜியோமார்ட் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக இந்தியாவின் 200 நகரங்களில் இந்தச் சேவை தொடங்கப்படவுள்ளதாக தெரிகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கு வந்து இலவச டெலிவரி கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜியோமார்ட்டின் சேவை அமலுக்கு வந்ததும் அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் உள்ளூர் கடைகளின் விற்பனைக்கு கடும் போட்டி இருக்கும் என கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்
