மனநலம் 'பாதிக்கப்பட்ட' பெண்ணிற்கு... சொந்த 'சகோதரரால்' நடந்த... 'உறைய' வைக்கும் கொடூரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள மனோகர்பூர் என்னும் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை அந்த பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அந்த சிறுமியின் தந்தை தனது மகளை காணவில்லை என போலீசாரிடம் புகாரளித்துள்ளார். அந்த பெண்ணின் அண்ணனும் தனது தங்கையை தேடுவது போல நடித்துள்ளார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் உட்பட நான்கு பேர் சேர்ந்து அந்த பெண்ணை காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
காட்டுப்பகுதியில் வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர், அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வாய்க்கால் ஒன்றில் போட்டு சென்றுள்ளனர். இந்த நான்கு இளைஞர்களுக்கும் வயது வரம்பு 19 - 21 க்குள் இருக்கும் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணின் சகோதரர் மற்றும் நண்பர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்ணின் சகோதரனே நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
