‘கோமாவிலிருந்து’ கண் விழிக்காத தாய்.. ‘உடலுறுப்பு தானத்திற்கு’ அறிவுறுத்திய மருத்துவர்கள்.. ‘2 வயது மகளால்’ அடுத்து நடந்த அதிசயம்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 04, 2019 01:06 PM

கோமாவில் இருந்த தாய் தன் மகளின் குரலைக் கேட்டதும் கண் விழித்து தாய்ப்பால் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Argentina Mother Wakes Up From Coma To Breastfeed Daughter

வடக்கு அர்ஜெண்டினாவைச் சேர்ந்த மரியா லாரா ஃபெர்ரோவிற்கு (42) 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த மாதம் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றபோது மர்ம நபர்களால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்த மரியா சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து கோமாவில் இருந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

சில நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பின்பும் மரியாவின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரியாததால் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்யும்படி மருத்துவர்கள் அவருடைய குடும்பத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்துபோன மரியாவுடைய கணவர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கும்படி கோரியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் தங்களுடைய 2 வயது மகளுடன் மரியாவின் கணவர் அவரைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் வழக்கமாக கேட்பதுபோலவே தனக்கு பசிக்கிறது என மரியாவைக் கட்டியணைத்து அவருடைய மகள் தாய்ப்பால் கேட்டுள்ளார். 30 நாட்களாக சுயநினைவின்றி இருந்த மரியா தன் மகளின் குரல் கேட்டதும் சட்டென்று கண் விழித்து தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்த அங்கிருந்த அவருடைய கணவர் மற்றும் மருத்துவர்கள் ஆச்சரியத்தில் உறைந்துபோய் நின்றுள்ளனர். ஆனால் மகளுக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு பின்னர் மீண்டும் அவர் சுயநினைவை இழந்துள்ளார். இருப்பினும் கோமாவிலிருந்து மரியா எழுந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளது அவர் விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் கொடுத்துள்ளது.

Tags : #ARGENTINA #WOMAN #COMA #MOTHER #BABY #BREASTFEEDING