‘அவளுக்கு ரொம்ப பிடிக்கும்’! ‘கணவருடன் செல்லும்முன் ஆசையா கொடுத்த அம்மா ’.. தம்கட்டி சாப்பிட்ட மணப்பெண்..! வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Nov 28, 2019 03:46 PM
மணப்பெண் தம்கட்டி பானி பூரி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வட மாநிலங்களில் அதிகமாக விரும்பி சாப்பிடப்படும் உணவு பானி பூரி. எங்கு சென்றாலும் எதாவது ஒரு மூலையில் யாரேனும் பானி பூரி விற்றுக்கொண்டு இருப்பர். அந்த வகையில் திருமணமான பெண் ஒருவர் பானி பூரி சாப்பிடும் அழகை இணையவாசிகள் ரசித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் திருமணமான மணப்பெண், மாப்பிள்ளை வீட்டுக்கு செல்வதற்குமுன் உறவினர்களின் முன்னிலையில் அமர்ந்து பானி பூரியை விரும்பி சாப்பிடுகிறார். அவருக்கு பானி பூரி பிடிக்கும் என்பதால் அவரது தாய் வீட்டில் பானி பூரியை ஆசை தீர சாப்பிட வைத்து அனுப்பி வைத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags : #VIRALVIDEO #BRIDE #WOMAN #PAIPURI
