‘விளையாடிட்டு இருந்த பையன்’.. ‘திடீர்னு தலைக்குள் சிக்கிய பானை’.. ‘மீட்க முயன்ற தீயணைப்புப்படை’.. பரபரப்பு சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Nov 28, 2019 11:30 AM
கேரளாவில் குழந்தையின் தலைக்குள் பானை மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரவம் என்ற ஊரை சேர்ந்தவர்கள் ஆபிரஹாம்-ஜிஜி தம்பதி. இவர்களது மகன் பியான் (3). வழக்கம்போல பியான் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். அப்போது வீட்டு வாசலில் இருந்த ஈயப்பானை ஒன்றை எடுத்து விளையாடியபோது எதிர்பாராதவிதமாக தலைக்குள் மாட்டியுள்ளது. இதனால் குழந்தை கதறி அழுதுள்ளது.
குழந்தையின் அழுகுரல் கேட்டி தாய் ஜிஜி ஓடிவந்துள்ளார். அப்போது மகனின் தலைக்குள் பானை சிக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் எடுக்க முடியவில்லை. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினரும் முயன்று பார்த்துள்ளனர். யாராலும் எடுக்க முடியாததால் குழந்தையின் பெற்றோர் பீதியடைந்துள்ளனர். குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது.
அப்போது அந்த வழியே வந்த ஜோஜின் என்பவர் தீயணைப்புத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தீயணைப்பு வீரர்கள் கத்தரியால் பானையை வெட்டி எடுத்து குழந்தையை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.