ஏன்?.. ‘என் சொந்த நாட்டுலயே என்னால பாதுகாப்பை உணரமுடியல’! தனி ஒருத்தியாக போராடி அதிர வைத்த இளம்பெண்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 30, 2019 10:50 PM

இந்தியாவில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி பெண் ஒருவர் தனியாளாக நாடாளுமன்றத்தின் போராட்டம் நடத்தினார்.

Woman protests outside Parliament over crimes against women

டெல்லி நாடாளுமன்ற வளாகம் முன்பு அனு தூபே என்ற இளம்பெண் திடீரென அமர்ந்து  ‘ஏன்? என் சொந்த நாட்டில் என்னால் பாதுகாப்பை உணரமுடியவில்லை’ என்ற பதாகையுடன் போராட்டம் நடத்தினார். உடனே அங்கு வந்த காவல் துறையினர், ஜந்தர் மந்தர் பகுதியில் சென்று போராடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில்,  ‘சொந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாக உணரமுடியவில்லை’ என தெரிவித்து தேம்பி அழுதுள்ளார். ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டார். அதேபோல் சில நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 25 வயது இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவங்களால் அப்பெண் தனி ஒரு ஆளாக போராடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் இனிமேல் ஈடுபட வேண்டாம் என அப்பெண்ணை போலீசார் அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர்.

Tags : #SEXUALABUSE #PROTEST #WOMAN #DELHI #PARLIAMENT