‘மருத்துவர் பிரியங்கா’ கொலை செய்யப்பட்ட.. ‘அதே பகுதியில்’ எரிந்த நிலையில் ‘மற்றொரு பெண் சடலம்’.. ‘உறைய வைக்கும் சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 29, 2019 11:45 PM

மருத்துவர் பிரியங்கா கொலை செய்யப்பட்ட அதே பகுதியிலிருந்து மற்றொரு பெண் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Telangana Woman Burnt Close To Where Doctor Priyanka Was Murdered

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத்தில் பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர் 2 நாட்களுக்கு முன் லாரி ஓட்டுநர்கள் மற்றும் க்ளீனர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகள் 4 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியே இன்னும் குறையாத நிலையில், தற்போது அதே பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் மற்றொரு பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அனைவரையும் உறைய வைத்துள்ளது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பாதி எரிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த பெண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அந்தப் பெண்ணும் பிரியங்காவைப் போலவே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இந்தக் கொலை நடந்ததா? உடல் எரிக்கப்பட்டுள்ளதால் பிரியங்காவைக் கொன்றவர்களே அந்தப் பெண்ணையும் கொலை செய்தார்களா? என்ற கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #TELANGANA #CRIME #HYDERABAD #PRIYANKAREDDY #DOCTOR #RAPE #MURDER #WOMAN