'சென்னையில் செல்போனால் வந்த வினை!'.. 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 01, 2019 02:01 PM

சென்னையில் குறிப்பாக வடசென்னை, கொடுங்கையூர், சௌகார்பேட்டை பகுதியில் மிகுந்த குறுகலான தெருக்களில், நெடுகலான வீடுகள் மாடிகளுடன் கட்டப்பட்டிருக்கும். 

2 Yr old child fall from a balcony succumbed to head injuries

இங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பால்கனிதான் பொழுதுபோக்கு என்பதால், பலரும் குழந்தைகளுக்கு சோறூட்டுவது, வேடிக்கை காண்பிப்பது போன்ற பழக்கங்களை செய்வது உண்டு. ஆனால், இதனால் எதிர்பாராத பல விதமான அசம்பாவிதங்கள் நடைபெறும் நிலையில், குழந்தைகள் தவறி விழுவதும் அவ்வப்போது நடந்து வரும் சோகங்களுள் ஒன்றாக உள்ளது.

அவ்வகையில் சென்னை வண்ணாரப்பேட்டை நாராயணப்பத் தோட்டம் 7வது தெருவைச் சேர்ந்த சையத் அபுதாகீர் என்பவரின் ஒன்றரை வயது மகனுக்கு 2வது மாடியில் நேற்றைய தினம் குழந்தையின் அம்மா சோறு ஊட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு போன் வந்ததாகவும், போனை அட்டென் செய்ய முற்பட்டபோது குழந்தை 2வது மாடியின் பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்து குழந்தை பலியானது. 

Tags : #CHENNAI #BABY #FALLS