‘மர்மமான முறையில் மரணம்’!.. ‘கணவர் தம்பியுடன் தகாத உறவு’.. சரணடைந்த பெண்ணின் பகீர் வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 02, 2019 06:07 PM

மர்மான முறையில் இளைஞர் உயிரிழந்த வழக்கில் அவரது அண்ணன் மனைவி போலீஸில் சரணடைந்துள்ளார்.

Woman arrested by police for murdered her brother in law

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வையங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 26ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மணிகண்டனின் அண்ணன் மனைவி காசியம்மாள் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அங்கு அவர் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

காசியம்மாளின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கணவரின் தம்பி மணிகண்டனுடன் காசியம்மாளுக்கு தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவதன்று மணிகண்டன் போதையில் காசியம்மாளிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது உறவினர் மகனான 17 வயது சிறுவனுடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ததாக போலீசாரிடம் காசியம்மாள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காசியம்மாள் உட்பட கொலைக்கு உடந்தையாக இருந்ததாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : #CRIME #MURDER #KILLED #ILLEGAL AFFAIR #WOMAN #CUDDALORE