‘பிறந்து சில தினங்கள் தான்’... ‘சிதைந்த நிலையில்’... ‘ஆற்றில் மிதந்து வந்த குழந்தை சடலம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 01, 2019 08:48 PM

திண்டிவனம் அருகே பிறந்து சில தினங்களே ஆன, பெண் குழந்தையின் சடலம் ஆற்றில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newly born girl baby thrown in river near tindivanam

மயிலம் அருகேயுள்ள  பாதிராப்புலியூர், தொண்டி ஆற்றில், அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றின் கரை ஓரத்தில் பிறந்த சில தினங்கள் ஆன பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் மிதந்து வந்தது. அத்துடன் குழந்தையின் உடல் சிதைந்து இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இது குறித்து மயிலம் போலீஸ் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த  போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #INFANT #GIRL #BABY