காதலியை கொன்னுட்டேன்.. 'விஷம்' அருந்திவிட்டு.. போலீசில் 'சரணடைந்த' இளைஞர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 04, 2019 01:04 PM

காதலியை கொன்றுவிட்டதாக விஷம் அருந்திவிட்டு போலீசில் சரணடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

UP man surrenders to police for killing a teenage girl

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தை அடுத்த கெராகர் பகுதி காவல் நிலையத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியை கொன்றுவிட்டு தானும் விஷம் அருந்தி விட்டதாக கூறி சரணடைந்தார். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,'' விஷம் அருந்திய அந்த இளைஞரின் பெயர் ஹெட் தோமர் சிங் (22) உடனடியாக அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிறுவனத்திற்கு அழைத்து சென்றோம்.

பின்னர் ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் இறந்து விட்டார். தோமரின் சகோதரியை அருகில் உள்ள கிராமம் ஒன்றில் திருமணம் செய்து வைத்துள்ளனர். அங்கு போகும்போது அந்த கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும், தோமருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண்ணின் வாழ்வில் இன்னொரு இளைஞர் வந்ததால், ஆத்திரமடைந்த தோமர் அந்த பெண்ணை சந்தித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று விட்டார்.

அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி நாங்கள் விசாரணை நடத்தினோம். அப்போது தோமர் தான் முதன்மை குற்றவாளி என தெரியவந்தது. இதுதொடர்பாக நாங்கள் விசாரணை நடத்தி வந்தோம். ஆனால் அதற்குள்ளாக தோமர் விஷம் அருந்தி இறந்து விட்டார். இதில் தோமரின் வாக்குமூலத்தை நாங்கள் பதிவு செய்துள்ளோம்,'' என தெரிவித்து உள்ளனர்.