‘காட்டில் கிடந்த செருப்பு, தொப்பி’! ஆடு மேய்த்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..! அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 02, 2019 02:52 PM

ஆடு மேய்க்க சென்ற பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

45 year old woman found murdered in Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அடுத்த தேனிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பானுமதி (45). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல நேற்று தென்னதிரையன்பட்டி ஆர்.எஸ்.பதி காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் பானுமதி வீடு திரும்பாததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து ஆடுகள் மட்டும் வீட்டுக்கு தனியாக வந்துள்ளது. இதனால் பதறிபோன உறவினர்கள் உடனே பானுமதியை தேடி காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த பானுமதியின் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். இதனை அடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பானுமதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் கொலை நடந்த இடத்தில் கிடந்த செருப்பு, தொப்பி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் அவரை கொலை செய்தது யார்? கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடு மேய்க்க சென்ற பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #KILLED #WOMAN #PUDUKKOTTAI