காதல் நிறைவேறாத ‘ஆத்திரத்தில்’.. இளம்பெண் செய்த ‘நடுங்க வைக்கும் காரியம்’.. ‘இளைஞருக்கு நடந்த கொடூரம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 27, 2019 11:19 PM

காதல் தோல்வியில் இளம்பெண் ஒருவர் இளைஞர்மீது ஆசிட் வீசித் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Girl Throws Acid On Youth Over Unrequited Love In Odisha

ஒடிசா மாநிலம் ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரிக். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், அந்தப் பெண் பாரிக்கிற்கு அடிக்கடி கால் செய்து வந்துள்ளார். ஆனால் பாரிக் அவரைத் தொடர்ந்து தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை அந்தப் பெண் பேச வேண்டுமென பாரிக்கை அழைத்துள்ளார். இதையடுத்து இருவரும் பாரிக்கின் சலூன் அருகே சந்தித்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அந்தப் பெண் பாரிக் மீது ஆசிட் வீசித் தாக்கியுள்ளார். இதில் அவருடைய முகம் மற்றும் மார்புப் பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

வலியால் பாரிக் அலறித் துடிக்க அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்மீது ஆசிட் வீசிய பெண்ணைக் கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் காதல் தோல்விதான் இந்த சம்பவத்திற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் அந்தப் பெண் பேட்டரிகளுக்கு பயன்படுத்தும் ஆசிட்டை சேகரித்து வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags : #ODISHA #ACIDATTACK #LOVE #WOMAN #YOUTH