‘பலத்த மழை’.. ‘அதிவேகத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்’.. ‘நள்ளிரவில்’ வீட்டிலிருந்த குழந்தை உட்பட 3 பேருக்கு பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 29, 2019 10:44 AM

கடலூரில் மழை காரணமாக மண் வீடு இடிந்து விழுந்ததில் ஒன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Cuddalore 3 Killed As House Collapses Due To Rain Train Vibration

கடலூர் கம்மியம்பேட்டையைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். ரயில் பாதையை ஒட்டியுள்ள இவர்களுடைய வீட்டைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு திடீரென வீடு இடிந்து விழுந்துள்ளது. அப்போது இடிபாடுகளில் சிக்கி நாராயணனின் மனைவி மாலா, மகள் மகேஷ் மற்றும் ஒன்றரை வயது பேத்தி தனுஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ரயில் பாதை அருகே வீடு அமைந்திருந்த நிலையில் இரவில் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்ற அதிர்வில் ஈரப்பதத்துடன் இருந்த வீடு இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #CUDDALORE #HEAVYRAIN #TRAIN #HOUSE #COLLAPSE #BABY #WOMAN #DEAD