‘பெண்ணுடன் அறை எடுத்து தங்கிய அதிகாரி’.. ‘காலையில் காத்திருந்த அதிர்ச்சி’.. கோயம்பேடு ஹோட்டலில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 28, 2019 04:52 PM

கோயம்பேடு ஹோட்டல் ஒன்றில் முன்னாள் அரசு அதிகாரியிடம் பெண் ஒருவர் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman stealing from man near koyambedu in Chennai

சென்னையை சேர்ந்த முன்னாள் அரசு அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பாலியல் தொழில் செய்யும் பெண்ணுடன் கோயம்பேட்டில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். அங்கு அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த அவர் அறையில் நன்றாக தூங்கியுள்ளார். இந்நிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது தன்னுடைய பொருட்கள் ஏதும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் அப்பெண்ணும் காணாமல் போயுள்ளார். இதனை அடுத்து தனது நகை மற்றும் பணத்தை அப்பெண் திருடி சென்றது அவருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் அவர் புகார் அளித்ததாக தெரிகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என நமது தரப்பில் இருந்து கோயம்பேடு காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டபோது அப்படி ஏதும் புகார் வரவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகே உள்ள விடுதிகளில் தொடர்ந்து நடப்பதாக கூறப்படுகிறது.

Tags : #ROBBERY #CHENNAI #PROSTITUTE #STEAL #WOMAN