‘விஷம் குடித்து தற்கொலை’! ‘காதலனிடம் கடைசியாக போனில் பேசிய இளம்பெண்’.. பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 03, 2019 11:56 AM

கன்னியாகுமரியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18 year old woman commits suicide in Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆரோக்கியபுரம் பகுதியை சேந்தவர்கள் ரெத்தினசாமி-சார்ல்லெட்பாய் தம்பதி. இவர்களது மகள் அனுஷியா (18). இவர் அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 24ம் தேதி வீட்டில் அனுஷ்யா விஷம் அருந்திய நிலையில் மீட்கப்பட்டார். இதனை அடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து அவரின் தாய் சார்லெட்பாய், பியூட்டி பார்லரில் வேலை பார்க்கும் தனது மகள் அனுஷியா கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்து 2000 ரூபாயை திருடிவிட்டதாகவும், அதற்காக திட்டியதால் எலி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அனுஷியாவின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் அனுஷியாவின் மரணம் தற்கொலை இல்லை கொலை என அவரது தோழிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களிடம் அனுஷியா ஒருபோதும் சந்தோஷங்களை பகிர்ந்துகொண்டதில்லை என்றும், அவர் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாகும் தெரிவித்துள்ளனர். இதற்கு அவரின் தாய் வீட்டில் அடைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே அவரது காதலனுடன் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அதில், தனது தாய் தன்னிடம் பேசும்போதெல்லாம் ‘செத்துப்போ’ என கூறுவதாகவும், அதனால் தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாகவும், நான் தற்கொலை செய்துகொண்டால் நீ என்ன செய்வாய் என்றும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அனுஷியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து போலீசார் தீவர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவரது தோழிகள் வலியுறுத்தியுள்ளனர்.

News Credits: Puthiya Thalaimurai TV

Tags : #CRIME #SUICIDEATTEMPT #KANYAKUMARI #WOMAN #DIES