‘வலியால் துடித்த கர்ப்பிணி’!.. 6 கிமீ தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவலம்.! பாதிவழியிலேயே பிரசவமான பரிதாபம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 03, 2019 05:38 PM

பிரசவ வலியால் துடித்த பெண்ணை தொட்டில் கட்டி தூக்கி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pregnant woman in the cradle to hospital in Erode

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சுண்டப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமாரி. கர்ப்பிணியான இருவருக்கு திடீரென பிரவச வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனே 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால் சமீபத்தில் பெய்த கனமழையால் பாறைகள் விழுந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆம்புலன்ஸ் ஏதும் வராததை அடுத்து கிராம மக்கள் சுமார் 6 கிலோமீட்டர் தொட்டில் கட்டி கர்ப்பிணி குமாரியை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் சாலையில் காத்திருந்த சரக்கு வாகனத்தில் பர்கூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே குமாரிக்கு பிரசவமாகியுள்ளது. அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மழைகாலங்களில் இதுபோன்ற இன்னல்கள் தொடர்வதால் தங்களுக்கு முறையான சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : #PREGNANT #WOMAN #CRADLE #HOSPITAL #ERODE #TAMILNADU