'வாட்டி வதைத்த கோர பசி.. மண்ணை உண்ட மகன்'!.. குடிகார கணவனால் 4 குழந்தைகளுடன் பெண் எடுத்த முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 03, 2019 03:16 PM

கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது கைதமுக்கு. இங்குள்ள ரயில்வே பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஷெட் போட்டு வசிக்கும் பல குடும்பங்களுள் ஒன்றுதான் ஸ்ரீதேவியும் அவரது ஆறு குழந்தைகளும்.

Kerala Mother leaves children at orphanage due to poverty

7 வயதாகும் முதல் குழந்தை முதல், 3 மாதமாகும் கடைசிக் குழந்தை வரை உள்ள 4 குழந்தைகளையும் கூலி வேலை செய்யும் தனது கணவரின் வருமானத்தை வைத்துதான் பார்த்துக்கொள்ள முடியும் என்கிற நிலையில் இருக்கும் ஸ்ரீதேவியோ, தனது கணவர்,  அவர் சம்பாதிக்கும் குறைந்த பணத்தையும் வைத்து மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் குழந்தைகளுக்கு எதுவும் வாங்க முடியாமல் தவித்துள்ளார்.

ஆனால் பசிபொறுக்காமல் மண்ணை அள்ளித் திண்ற தனது மூத்த மகனைப் பார்த்ததும் பொறுக்க முடியாத ஸ்ரீதேவி, கேரள குழந்தைகள் காப்பகத்தில் சென்று தனது 2 ஆண் குழந்தைகளையும் 2 பெண் குழந்தைகளையும் ஒப்படைத்து கதறி அழுதுள்ளார். கண்கலங்கிய காப்பக நிர்வாகிகள், கடைசி 2 கை குழந்தைகளை தாயிடமே ஒப்படைத்துவிட்டு, மற்ற மகன்களை காப்பகத்தில் சேர்த்துக்கொண்டனர். அவர்களை எப்போது வேண்டுமானாலும் ஸ்ரீதேவி தன்னுடன் அழைத்துச் செல்லலாம், ஆனால் அவர்களுக்கு உணவும் கல்வியும் நிறைவாக வழங்கப்படுவதோடு, தாய் ஸ்ரீதேவிக்கு தற்காலிகப் பணி வழங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் காப்பக நிர்வாகி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசிய ஸ்ரீதேவி, ‘என் கணவர் மேல் புகார் அளித்து பயனில்லை. அதே நேரம் என் குழந்தைகள் வயிறார உண்டு வாழ்ந்தால் போதும்’ என்று கூறி மனதை இறுக்கமாக்கிக் கொண்டு குழந்தைகளை பிரிந்தார்.

Tags : #KERALA #BABY #MOTHER