'என் பொண்ண சிதைச்சிட்டாங்களே'...'நான் சொல்ற தண்டனைய கொடுங்க'...பிரியங்காவின் தாய் ஆவேசம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Nov 30, 2019 10:43 AM

கால்நடை மருத்துவர் பிரியங்காவின் கொடூர கொலை நாடுமுழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பலரும் ககூறி வரும் நிலையில், மருத்துவர் பிரியங்காவின் தாய் தான் கூறும் தண்டனையை குற்றவாளிகளுக்கு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Should Burn the Culprits Alive, Vet Doctor Priyanka\'s Mother

ஐதராபாத்தில் உள்ள ஷம்சபாத்தில் உள்ள நட்சத்திரா நகரைச் சேர்ந்தவர் பிரியங்கா. கால்நடை மருத்துவரான இவர், கொல்லூரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். தினமும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்படும் பிரியங்கா, சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு, அங்கிருந்துபேருந்து மூலமாக கொல்லூருக்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி அவசர பணிக்காக மருத்துவமனை செல்ல சின்ஷபள்ளி சுங்கச்சாவடிக்கு வந்த‌ருக்கிறார். அப்போது மது போதையில் இருந்த ஒரு கும்பல் திட்டமிட்டு, பிரியங்காவின் இருசக்கர வாகனத்தின் டயரை பஞ்சராக்கியது. இரவு 9 மணிக்கு வந்து பார்த்த போது தனது பைக் பஞ்சராகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதை தள்ளிக் கொண்டு செல்ல முற்பட்டார். அப்போது தன்னை லாரி ஓட்டுநர்கள் 4 பேர் பின் தொடர்வதாகவும் பயமாக இருப்பதாகவும் தனது சகோதரிக்கு போனில் தெரிவித்துள்ளார்.

மது போதையில் இருந்த லாரி ஓட்டுநர் முகமது அஷாவும், கிளீனர் சிவாவும் உதவுவதாக பிரியங்காவிடம் கூறியுள்ளனர். அவர் சரி என கூற, பிரியங்காவை ஆள் இல்லாத இடத்திற்கு இருவரும் தூக்கிச் சென்றனர்.  அங்கு சின்னகேசவலு, நவீன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து பிரியங்காவின் உடலை தார்பாயில் சுற்றி லாரியில் போட்டு அந்த கும்பல் எடுத்து சென்றது.

இதனைத்தொடர்ந்து கட்டபள்ளி என்ற பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் வைத்து பிரியங்காவின் சடலத்தை தீயிட்டு கொளுத்திய நால்வரும், தப்பிச் சென்றுள்ளனர். சுங்கச்சாவடி மற்றும் பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சியின் அடிப்படையில், இந்த நால்வரும் தான் குற்றத்தில் ஈடுபட்டதாக உறுதி செய்த சைபராபாத் காவல்துறை அவர்களை கைது செய்திருக்கிறது. இந்நிலையில் தனது மகளை இப்படி உரு தெரியாமல் சிதைத்தவர்களை எல்லோர் முன்பும் எரித்துக்கொல்ல வேண்டும் என்று பிரியங்காவின் தாய் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''என் மகளோட பைக் பஞ்சராச்சுன்னு சொன்ன இடத்துல போய் தேடி பார்த்தோம். அதிகாலை 4 மணி வரை தேடியும் கண்டுபிடிக்க முடியல. என்னோட மகள் என்ன கொடுமை எல்லாம் அனுபவிச்சான்னு தெரியல. அந்த கொடூரர்களை சும்மா விடக்கூடாது. ‘என் மகளை கொன்னவங்களை எல்லார் முன்னாலயும் உயிரோட கொளுத்தணும்’ என ஆவேசமாக கூறினார்.

Tags : #SEXUALABUSE #KILLED #PRIYANKA REDDY #VETERINARY DOCTOR #MOTHER