சமைச்சு வச்ச 'சிக்கன' சாப்பிட முடியாதா?.... படுகாயங்களுடன் 'மருத்துவமனையில்' அனுமதிக்கப்பட்ட வாலிபர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமைத்து வைத்த சிக்கனை சாப்பிட மறுத்த வாலிபர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் உமார்சந்த் மகாட்டோ (19). இவரும் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் யாதவ் (27) என்பவரும் கோவையில் உள்ள கயிறு தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். இரண்டு பேரும் அறை எடுத்து தங்கி இருக்கின்றனர்.
சம்பவ தினத்தன்று ராஜ்குமார் சிக்கன் சமைத்துள்ளார். அதை சாப்பிடுமாறு உமார்சந்திடம் கேட்க அவர் மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் அங்கிருந்த பிளாஸ்டிக் பைப்பை எடுத்து உமார்சந்தை தங்கியிருக்கிறார். இதில் படுகாயமடைந்த உமார்சந்தை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து உமார்சந்தை தாக்கிய குற்றத்திற்காக ராஜ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்
