கற்கள், கம்புகள், 'முள் கம்பி'களைக் கொண்டு... 'இந்திய' வீரர்களை தாக்கிய சீனா?... எல்லைப்பகுதியில் 'குவிக்கப்பட்ட' 5000 வீரர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கற்கள், கம்பிகள், முள் வேலிகளை கொண்டு சீன ராணுவம் முறையற்ற தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சீனாவுடன் இந்தியா மிகப்பெரிய அளவில் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தொடர்பாக அவ்வப்போது முட்டல்கள், மோதல்கள் ஏற்படுவது வாடிக்கை. தற்போது கொரோனாவுக்கு எதிராக இந்தியா முழுமூச்சுடன் போராடி வரும் சூழ்நிலையில் எல்லைப்பகுதிகளில் சீன ராணுவம் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
உச்சகட்டமாக இன்று லடாக் அருகே இருக்கும் பாங்கோங் ஏரி அருகே உள்ள எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்கள் மீது முறையற்ற தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் கைகளில் துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து ராணுவ உபகரணங்கள் இருந்தும் இந்தியா ராணுவத்தின் மீது, கற்கள், கம்பு, முள்வேலி கம்பிகள் முதலியவற்றை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளது. பதிலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடியை கொடுத்துள்ளது.
என்றாலும் முறையற்ற இந்த தாக்குதலில் சீன வீரர்கள் ஈடுபட்டது மிகப்பெரிய அளவில் சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் எல்லைப்பகுதியில் சீனா 5000 ராணுவ வீரர்களை குவித்து இருப்பதால் மிகப்பெரிய அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று படைத்தளபதிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். பிரதமர் மோடியும் இதுதொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார்.

மற்ற செய்திகள்
