'திடீரென' தாக்க வந்த முரட்டு சைஸ் 'கரடி...' '10 அடி' தூரத்தில் நின்ற 'சிறுவன்...' 'பதைபதைக்க' வைக்கும் 'வைரல் வீடியோ...'
முகப்பு > செய்திகள் > உலகம்மலைப்பகுதியில் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனை கரடி ஒன்று திடீரென தாக்க வந்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு இத்தாலியில் ட்ரெண்டினோ மலைப்பகுதியில் பெண் ஒருவர் தனது 12 வயது மகனுடன் நடைபயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது சிறுவன் ஒரு சரிவில் நின்றபடி அங்கிருந்த மலர்களை பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென் எங்கிருந்தோ வந்த கரடி ஒன்று சிறுவனின் பின்னால் மெதுவாக வந்துள்ளது.
இதை பார்த்த அந்த பெண் சிறுவனிடம் எந்த ஒலியை எழுப்பாமல் அமைதியாக கீழே இறங்கி வரும்படி கூறுகிறார். சிறுவனும் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் திரும்பி பார்த்தபடி இயல்பாக இறங்கி வந்து விட்டான். இதனால் கரடி முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாமல் சிறிது பின்னால் வந்துள்ளது.
சில தூரம் அவர்களை பின்தொடர்ந்து வந்த கரடி மீண்டும் தனது பாதையில் திரும்பி சென்றுவிட்டது. 45 வினாடிகள் இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எந்தவித அச்சத்தை ஏற்படுத்தாமல் அந்த சிறுவனை அவரது தாய் வழிநடத்தியதால் தான் சிறுவன் தப்பினான் என நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கரடியை பார்த்து திகைத்து நிற்காமல் அதனிடமிருந்து தப்பிய அவர்களின் சாதுர்த்தியத்தை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
A voi il mio incontro con @‘orso di sta mattina sopra la malga Sporminore... pic.twitter.com/VN6QmAV9oV
— Loris Calliari (@loriscalliari) May 24, 2020