'உயிரோட' இருக்கணும்னா... பேசாம அதை 'கலைச்சிரு'... கர்ப்பிணி மனைவிக்கு 'கணவரால்' நேர்ந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கணவர் எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (32). இவரின் மனைவி ரம்யா (25). கட்டிட தொழிலாளிகளுக்கான இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பிணி ஆனார். இதற்கிடையில் முனுசாமி ஜாதகம் பார்க்க சென்றார். அப்போது ரம்யாவின் வயிற்றில் இருக்கும் குழந்தையால் முனுசாமி உயிருக்கு ஆபத்து என அந்த ஜோசியர் தெரிவித்து இருக்கிறார்.
இதையடுத்து ரம்யாவின் வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைக்குமாறு முனுசாமி வற்புறுத்தி இருக்கிறார். இதற்கு ரம்யா மறுத்து விட்டார். இதில் ஆத்திரம் அடைந்த முனுசாமி சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம், கருவை கலைக்குமாறு கூறி அடித்து உதைத்துள்ளார். பின்னர் அவருடைய கழுத்தில் இருந்த தாலி கயிற்றை கையால் இழுத்துக்கொண்டு, காலால் கர்ப்பிணியான மனைவியை ஈவு, இரக்கம் இல்லாமல் எட்டி உதைத்துள்ளார். இதனால் ரம்யா வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினரை பார்த்து முனுசாமி தப்பித்து ஓடிவிட்டார். அவர்கள் அனைவரும் சேர்ந்து ரம்யாவை அவரின் அம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 22-ம் தேதி வலி ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற ரம்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கரு கலைந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசில் ரம்யா புகாரளிக்க போலீசார் தப்பித்து ஓடிய முனுசாமியைவலைவீசி தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
