‘முதல் நாள் 4 பேர், அடுத்த நாள் 5 பேர்’!.. ஒரே கிணற்றில் மிதந்த 9 சடலங்கள்.. ‘விலகிய மர்மம்’.. வெளியான ‘பகீர்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒரே கிணற்றில் 9 பேர் சடலமாக மிதந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தின் கோரே குந்தா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு அப்பகுதியில் கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு மேற்வங்கம், பீகார், திரிபுரா உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அதில் மேற்வங்கத்தை சேர்ந்த மசூத் என்பவர் இந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கரிமாபாத் என்ற பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை மூடப்பட்டதால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், தொழிற்சாலை உரிமையாளருக்கு சொந்தமான குடேனில் தங்கியுள்ளனர். இதனை அடுத்து திடீரென அவர்கள் காணாமல் போனதாக தொழிற்சாலையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் மசூத் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தனர்.
இதனிடையே கடந்த வியாழக்கிழமை தொழிற்சாலைக்கு அருகில் உள்ள கிணற்றில் 4 சடலங்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைந்த வந்த போலீசார் கிணற்றில் மிதந்த சடலங்களை மீட்டனர். விசாரணையில் அவர்கள் தொழிற்சாலையில் பணிபுரிந்த மசூத், அவரது மனைவி நிஷா, கணவரை பிரிந்த வாழ்ந்த அவர்களது மகள் புர்ஷா மற்றும் அவரது மூன்று வயது மகன் என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் அதே கிணற்றில் 5 சடலங்கள் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் மசூத் மகன் சபாக், பீகாரை சேர்ந்த தொழிலாளிகள் ஸ்ரீராம், ஷாம் மற்றும் திரிபுராவை சேர்ந்த ஷகீல் அகமது ஆகியோரின் சடலங்களை போலீசார் மீட்டனர். ஒரே கிணற்றில் அடுத்தடுத்து 9 சடலங்கள் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது கிணற்றில் சடலம் மீட்கப்பட்ட முந்தைய நாள் மசூத்தின் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது தெரிவந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு சஞ்சய் குமார் ஷா என்ற பீகாரை சேர்ந்தவர் வந்தது விசாரணையில் தெரிவந்துள்ளது. இதனை அடுத்து சஞ்சய் குமார் ஷா உள்ளிட்ட 4 நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணயில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், கணவரை பிரிந்து வாழ்ந்த மசூத்தின் 22 வயது மகள் புஷ்ராவுக்கும், சஞ்சய் குமார் ஷாவுக்கு இடையே தகாத உறவு இருந்துள்ளது. ஆனால் திடீரென சஞ்சய் குமார் ஷா உடனான உறவை புஷ்ரா துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் குமார் ஷா, மசூத்தின் குடும்பத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு தனது நண்பர்களுடன் வந்த சஞ்சய் குமார் ஷா, குளிர்பானத்தில் அனைவருக்கும் விஷம் கலந்து கொலை செய்துள்ளார். பின்னர் 9 பேரின் சடலத்தை அடுத்தடுத்து கிணற்றில் வீசியது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வெளிவந்துள்ளது. தகாத உறவை முறித்த பெண்ணின் குடும்பத்தை விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.