உயிருக்கு 'போராடிய' 9 வயது சிறுமி... காப்பாத்துங்க என 'கதறிய' 14 வயது சிறுவன்... கொலையாளியை பார்த்து 'ஸ்டன்னாகி' போன போலீஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உயிருக்கு போராடிய 9 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள மேல சமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜாங்கம் என்பவரது மகள் மகள் கிருத்திகா(9). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியொன்றில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை அப்பகுதியில் உள்ள மல்லிகை தோட்டமொன்றில் ரத்த வெள்ளத்துடன் கிருத்திகா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதை அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் பார்த்துவிட்டு பொதுமக்களிடம் கூற, அவர்கள் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கிருத்திகாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மோப்ப நாயை வரவழைத்து கொலையாளி யார் என்பதையும் கண்டறிய முயற்சி செய்தனர். மோப்ப நாய் அங்கு கிடந்த கறை படிந்த உடைகள் அருகில் சென்று நின்றது.
இதைப்பார்த்த போலீசார் அந்த உடை யாருடையது? என விசாரித்தனர். அப்போது சிறுமியை காப்பாற்ற சொன்ன சிறுவனின் உடை என்பது தெரிய வந்தது. போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி கிருத்திகா இறந்தார். விசாரணையில் சிறுவன், கிருத்திகாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது கிருத்திகா சத்தம் போட்டதால் கல்லை எடுத்து அவர்மீது போட்டது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

மற்ற செய்திகள்
