‘மோரில் தூக்கமாத்திரை’.. ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளி கொலை.. அதை மறைக்க 9 கொலை.. அடுத்தடுத்து ‘பகீர்’ கிளப்பிய நபர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 26, 2020 11:23 AM

தெலுங்கானாவில் 9 பேர் கிணற்றில் தள்ளி கொலை செய்த வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

To hide one murder, Bihar man killed entire family

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கொர்ரா குண்டா பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சஞ்சய் குமார் என்ற நபர் மற்றும் அவரது நண்பர்கள் மூவரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தெரிவித்த வாரங்கள் நகர போலீஸ் ஆணையர் தாமோதர், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் அடிப்படையில் சஞ்சய் குமார் என்ற நபர் உட்பட 4 பேரை கைது செய்தோம். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பிஹாரை சேர்ந்த சஞ்சய் குமார் (24), மேற்கு வங்கத்தை சேர்ந்த மசூத் ஆகியோர் வாரங்கல் உள்ள கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது கணவரை பிரிந்து வாழ்ந்த மசூத்தின் மகள் புர்ஷா (31) உடன் சஞ்சய் குமாருக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் புர்ஷாவின் மூத்த மகளிடம் சஞ்சய் குமார் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையறிந்த புர்ஷா, சஞ்சய் குமாரை கண்டித்து அவருடனான உறவை முறித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் குமார், புர்ஷாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 6ம் தேதி திருமணம் செய்து கொள்வதாக கூறி புர்ஷாவை சிறப்பு ரயிலில் மேற்கு வங்கம் அழைத்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு மோர் பாக்கெட்டில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டுள்ளார். பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பிய சஞ்சய் குமாரிடம் புர்ஷா குறித்து அவர்களது குடும்பத்தினர் கேட்டுள்ளனர். ஆனால் அவர் ஊருக்கு சென்றுள்ளதாகவும், சீக்கிரம் திரும்பி வருவார் என மழுப்பலாக பதிலளித்துள்ளார். அடிக்கடி புர்ஷா குறித்து கேட்டு தொந்தரவு செய்துகொண்டே இருந்ததால் அவர்களையும் கொலை செய்ய சஞ்சய் குமார் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி சம்பத்தன்று மசூத்தின் மகனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அதில் கலந்துகொண்ட சஞ்சய் குமார் அவர்களுக்கு உணவில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதை அவர்களது வீட்டு மாடியில் தங்கியிருந்த பிஹாரை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு கொடுத்துள்ளார். தூக்கமாத்திரை கலந்த உணவை சாப்பிட்ட அனைவரும் மயக்கமடைந்ததும் அவர்களை கோணிப்பையில் கட்டி நண்பர்களின் உதவியுடன் கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். இவை அனைத்து விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் ஆணையர் தாமோதர் தெரிவித்துள்ளார். பெண்ணின் தகாத உறவால் ஒரு கொலையை மறைக்க 9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. To hide one murder, Bihar man killed entire family | India News.