நீ தான் என் 'செகண்ட்' பொண்டாட்டி...! 'ஊருக்கு வாங்க மாப்ள, அவளை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்...' வசமாக வந்து சிக்கிய வாலிபர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 27, 2020 11:13 AM

இரண்டாவது திருமணம் செய்ய தொல்லைக் கொடுத்த வாலிபரை திட்டம் போட்டு, கையும் களவுமாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youth arrested from Singapore for second marriage

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(36). இவர்  கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி செல்வராணி என்ற மனைவியும் 8 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. சிங்கப்பூரில் வேலை செய்துவந்த இவர் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்துசெல்வதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்தப்போது, கடலூரைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணான கல்லூரி மாணவி மீது ஆசை கொண்டுள்ளார்.

ஒருநாள் அவர் படிக்கும் கல்லூரிக்கு சென்று அவரை காரைக்கால் கடற்கரைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். அப்போது சுப்பிரமணியன் அந்த மாணவியிடம்,``நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன். நீதான் என் ரெண்டாவது மனைவி" என்று கூறியுள்ளார். அதன் பின்னர் சிங்கப்பூர் சென்ற சுப்பிரமணியன், அங்கிருந்து வாட்ஸ்அப் மூலம் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை அளித்து வந்துள்ளார்.

அதன்பின்னர் விவகாரம் பெரிதாவதை உணர்ந்த மாணவி பெற்றோர்கள் மூலம் நாகை மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினத்திடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வேதாரண்யம் டிஎஸ்பி மற்றும் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருவரும் வழக்குப்பதிவுசெய்து, சுப்பிரமணியனைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். அவரை ஊருக்கு வரவழைத்து கைது செய்யலாம் என போலீசார் திட்டம்போட்டனர். அதற்காக அந்த மாணவிக்கும் சுப்பிரமணியனுக்கும் திருமணம் செய்து வைக்கிறோம் என மாணவியின் உறவினர் ஒருவர் மூலம் சிங்கப்பூரில் இருக்கும் சுப்பிரமணியத்திடம் பேசவைத்தனர்.

இதை உண்மை என நம்பிய சுப்ரமணியன், சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் ஆசையாக திருமண கனவுகளோடு, குதூகலமாக கோவை விமான நிலையம் வந்து இறங்கினார். அங்கு தயாராக இருந்த போலீசார் அவரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #MARRIAGE #LOVE