‘நாங்க முஸ்லிமா இருந்தாலும்...’ ‘எங்க பொண்ணுக்கு இந்து முறைப்படி தான் கல்யாணம் நடக்கணும்...’ அசத்திய கேரளப் பெற்றோர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 19, 2020 11:54 AM

முஸ்லீம் தம்பதிகள் தனது மகளுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்தது தற்போது இணைய தளங்களில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Muslim parents who married their daughter in a Hindu Ritual

கேரளா எப்பொழுதுமே மாற்றத்திற்கு பெயர்போன மாநிலமாக திகழ்கிறது. இதற்கு முன்பு இந்து தம்பதிகள் கேரளா மஜிதில் திருமணம் செய்த நிகழ்ச்சி அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. அதே போல் மற்றுமொரு சம்பவம் கேரளாவில் நேற்று நிகழ்ந்துள்ளது.

கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. சிறுவயதிலேயே தன் தாய் தந்தையை இழந்து, தன் உறவினர்கள் கூட தெரியாமல் அனாதையாக அப்பகுதியில் வளர்ந்து வந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த அப்துல்லா தன் மனைவி கதீஜா மற்றும் அவர்களது மூன்று மகன்கள் குடும்பத்தோடு வசித்து வந்தனர். கஜிதாவிற்கு மூன்று மகன்கள் இருந்தாலும் ஒரு பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசை நினைவேறாமல் இருந்துள்ளது.

பெற்றோரை இழந்து வாழும் ராஜேஸ்வரியை பற்றி அறிந்த அப்துல்லா - கஜீதா தம்பதிகள் அவரை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.  பெண் குழந்தை இல்லாத கஜீதா ராஜேஸ்வரியை கடவுள் கொடுத்த ஆசீர்வாதமாக நினைத்து எந்தவித குறையும் இல்லாமல் தன் சொந்த மகளை போலவே வளர்த்து வந்தார். பெற்றோர்கள் இஸ்லாம் மார்க்கத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் தன் மகளை மதம் மாற்ற அவர்கள் விரும்பவில்லை எனவே, இந்துப் பெண்ணாகவே வலம் வந்தார் ராஜேஸ்வரி.

22 வயது நிரம்பிய ராஜேஸ்வரிக்கு திருமண வரம் பணியில் இறங்கிய அப்துல்லா கன்ஹன்காட் பகுதியிலுள்ள விஷ்ணு பிரசாத் என்பவர் ராஜேஸ்வரிக்கு தேர்வு செய்யப்பட்டு இரு குடும்பங்களின் ஆசிர்வாதங்களோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்து முறைப்படி தான் தன் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அப்துல்லா அதுவே மகளின் ஆசையாகவும் இருந்திருக்கும் என எண்ணினார்.

அப்துல்லா கஜீதா அவர்களின் செலவில்,  இந்து மத முறைப்படி கேரளாவிலுள்ள பகவதி கோயிலில் ராஜேஸ்வரி மற்றும் விஷ்ணுபிரசாத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.  இந்து மக்களும், முஸ்லிம் மக்களும் ஒருங்கிணைந்து இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ராஜேஸ்வரி விஷ்ணு பிரசாத் திருமண புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் பரவி அனைவரது வாழ்த்தையும் பெற்றுவருகிறார்கள். ராஜேஸ்வரியின் தந்தை அப்துல்லா தன் மகள் மாமியார் வீட்டிற்கு சென்ற பிறகு மனைவி கஜீதா மகளை பிரிந்து சோகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ராஜேஸ்வரி மற்றும் விஷ்ணு பிரசாத் திருமணம் அனைவரது மனதையும் மகிழ்விக்கும் திருமணமாக அமைந்தது.

Tags : #MARRIAGE