'தாயின் நட்பால் நிகழ்ந்த விபரீதம்'... '4 வயது மகனுக்கு நடந்த கொடூரம்'... 'அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 24, 2020 07:18 AM

நெல்லை அருகே தாயின் தவறான நட்பால் 4 வயது மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Four Year Old Boy who Murdered by his Mother illicit Lover

நெல்லை மாவட்டம் டாணா பகுதியை சேர்ந்தவர் அந்தோணி பிரகாசம் (28). டேங்கர் லாரி ஓட்டுநரான இவர், பொள்ளாச்சியைச் சேர்ந்த தீபா காதலித்து, கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகன் இருந்தார். இந்நிலையில், அந்தோணி பிரகாஷின்  மனைவி தீபா சுய உதவிக் குழு மூலம் தனியார் தொண்டு நிறுவனத்தில் கடன் பெற்றார். அந்த நிறுவனத்தில் இருந்து கடன் தவணை வசூலிக்க வரும் அருணாசலபுரத்தை சேர்ந்த சொரிமுத்து என்பவருடன் தீபாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வேலை நிமித்தமாக கணவர் அடிக்கடி வெளியூர் சென்ற நிலையில் இவர்களது நட்பு தவறாக மாறியுள்ளது. இதனை அறிந்து அந்தோணி பிரகாசம், தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தீபா, ஒருமுறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார். அதன்பின்னரும் சொரிமுத்துவின் பழக்கத்தை விடமறுத்த தீபா, தனது கணவர் வெளியூர் சென்றிருந்த நிலையில், கடந்த 20-ந் தேதி, தனது மகன் மற்றும் சொரிமுத்துவுடன் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார்.

அங்கிருந்து அவர்கள் சிவராத்தியை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்றபோது, தீபா சாமி கும்பிட போயிருந்தார். சொரிமுத்துவுடன் வெளியே இருந்த மகன் லோகேஷ், வீடியோ காலில் வந்த தந்தையிடம், ஒரு மாமாவுடன் கோயிலுக்கு வந்திருப்பதாக கூறியுள்ளான். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சொரிமுத்து, தன்னை காட்டிக் கொடுத்துவிட்டதாக சிறுவன் என்றும் பாராமல், அவனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து மயக்கமடைந்த லோகேஷைப் பார்த்து தாய் பதறிப் போயுள்ளார். பின்னர் சிறுவன் லோகேஷை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பெற்றோர் எனக் கூறி சேர்த்துள்ளனர்.

ஆனால் சிறுவன் லோகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தகவலறிந்து அந்தோணி பிரகாசம் மருத்துவமனைக்கு வந்த நிலையில், தந்தை என்று சொரிமுத்து கையெழுத்திட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனின் தாய் தீபாவை கைது செய்தனர். தப்பியோடிய சொரிமுத்துவை நெல்லை அருகே போலீசார் கைதுசெய்தனர். தவறான நட்பால் ஒரு குடும்பமே சிதைந்ததுடன், குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #TIRUNELVELI #MOTHER #SON #LOVE